பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: தபால் திணைக்களம்
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடமையிலிருந்து விலகியதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் இன்று(02) அறிவிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அறிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மாத்திரமே திறக்கப்படும் என தபால் மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேலை நிறுத்தம்

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
வேலை நிறுத்தம் காரணமாக, கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையின் வெளிநாட்டு பிரிவில் அனுப்பப்படாத பொதிகள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam