நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!: வெளிவந்த காரணம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கை

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே பி எஸ் குமாரசிறி, மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல ஆகியோருக்கு எதிராகவே சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகம் ஆலோசித்து வருகின்றது.
இதற்கமைய அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய Toyota Land Cruiser வாகனமும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய Toyota Hilux வாகனமும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வாகனங்கள்

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தமையினால், வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக
தெரிவித்து குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி செயலகம் அவதானம்
செலுத்தி வருகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam