தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மீது சட்ட நடவடிக்கை
நோயாளிகளின் பாதுகாப்பை பாதிக்கும் கடுமையான பிரச்சினைகள் காரணமாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
முறைப்பாடுகள்
Ondansetron ஊசி மருந்து, சில என்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மரணங்கள், கடுமையான அலர்ஜி எதிர்வினைகள் மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மரணம் ஆகியவை இந்த முறைப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன.
2024 - 2025 காலத்தில் இந்திய நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல மருந்துகள் தரக்குறைவால் திரும்பப் பெறப்பட்டதாக, மருத்துவர்கள் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்க தலைவர் சாமல் சஞ்சீவ தெரிவித்தார்.
திரும்பப் பெறப்பட்ட மருந்து தொகுதிகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மருந்து தொகுதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
எனவே மருந்து ஒழுங்கு முறைகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொறுப்புடைய அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri