பதவி விலகாத கோட்டாபயவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சபாநாயகர் அதிரடி நடவடிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை நள்ளிரவுக்கு முன்னர் கையளிப்பதாக அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.
பதவி விலகலில் இழுபறி

தனக்கும் அழுத்தங்கள் இருப்பதாகக் கூறி, தனது பதவி விலகல் கடிதத்தை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெறாவிட்டால், அவர் பதவியை விட்டு விலகியதாக கருதி மேற்கொள்ளவுள்ள சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கூடுவதில் சிக்கல்
இதேவேளை, ஜனாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்காத நிலையில், நாளை நாடாளுமன்றம் கூடுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதென நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam