பயணத்தடைகளை மீறிய 35 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் பயணத்தடைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தளாயில் இன்று (31) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு 35 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணத்தடைகளை மீறிய 35 பேருக்கெதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அநாவசியமான முறையில் வாகனங்களில் சென்ற 35 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதிகளில் அநாவசியமான முறையில் திரிவோரை பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளனர்.
இச்செயற்பாடு திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய், திருகோணமலை, மூதூர் கிண்ணியா மற்றும், உப்புவெளி,போன்ற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்ககக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் பயணத்தடை அமுலிலுள்ள காலத்தில் வெளியில் அனுமதியின்றி நடமாடுவோரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
