ஓ.எம்.பியை வலுப்படுத்த வேண்டாம்: ஐ.நா பிரதான அமர்வில் லீலாதேவி வேண்டுகோள்
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம் என நாங்கள் உறுதியாக உள்ள நிலையில் நடைமுறையில் நாம் நிரூபித்தவாறு ஓ.எம்.பியை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்காதீர்கள் என ஐ.நா மனித உரிமைகள் பிரதான அமர்வில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவையில் நேற்று (30.09.2022) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளர்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிலைப்பாட்டை நிரூபிப்பதற்காக வலுவான ஆதாரங்கள் மூலம் ஓ.எம்.பி ஆதாரங்களுடன் காணாமலாக்கப்பட்ட 5 நபர்களின் விவரங்கள், அவர்கள் ஒப்புக்கொண்டபடி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு வழக்குக்கு தீர்வு காண வேண்டும்.
ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் ஒரு வழக்கைக் கூட இதுவரை நிரூபிக்க முடியவில்லை.
ஓ.எம்.பி உடனான முரண்பாடு
ஓ.எம்.பி உடனான எமது முரண்பாடு நீடித்து வரும் நிலையில் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் என்றால் தாங்களாகவே காணாமல் போனவர்கள் என்று அர்த்தம் போதிப்பதா, ஆனால் எங்கள் உறவுகள் விடயத்தில் அவர்கள் சரணடைந்து எங்களால் முறையாக ஒப்படைக்கப்பட்ட பின்னர் விருப்பமின்றி காணாமல் போயுள்ளனர்.
பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள்
கடந்த 13 ஆண்டுகளாக நிகழ்ச்சி நிரல் 2 இன் கீழ் தீர்மானங்கள் உள்ளன.
ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டாயக் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த ஒரு உறுதியான மாற்றமும் இல்லை.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான ஒரு சிறப்பு அறிக்கையாளரை நிகழ்ச்சி நிரல் 4 இன் கீழ் இரண்டாவது தீர்மானத்தின் கோர் குழு நாடுகளை, குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
எமக்கான நீதியை பெறுவதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
