காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய காத்தான்குடி செல்லும் விசேட குழு
காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு காத்தான்குடிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்களை உறவினர்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும் என படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பான ஏறாவூர் ஞாபகார்த்தப் பேரவையினால் பொதுமக்களுக்கு பொது அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் வருகை
இது தொடர்பாக பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் விடுக்கப்பட்ட பொது அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் திங்களன்று (26.09.2022) காத்தான்குடிக்கு வருகை தரவுள்ளது.
சாட்சியங்களை சமர்ப்பித்தல்
எனவே அந்த சந்தர்ப்பத்தில் ஆணைக்குழு முன் தோன்றி பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் இந்த பிரதேசத்திலிருந்து காணாமலாக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு இல்லாமலாக்கப்பட்டோரின் விபரங்களை சமர்ப்பித்து சாட்சியங்களை பதிவு செய்ய முடியும்.
இவ்விடயம் குறித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்களில் விபரங்களை சமர்ப்பிக்க முடியும்.”என அறிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
