தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து!
தமிழக அரசியலில் மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைப் பெற்றதற்காக த.வெ.க தலைவர் விஜய்க்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நீங்கள் முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ள நற்பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணையாக இருப்பாராக எனவும் அவர் விஜயை வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு மக்களின் தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். என் மண்ணில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே குரலில் எழுந்து நின்று, பின்வரும் கருத்துகளைத் தெளிவுபடுத்தியதைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்த்துகள்
வாக்குகள் விற்பதற்கு இல்லை, வாரிசு அரசியலுக்கு இடமில்லை மற்றும் அரசியலில் ஒரு தலைமுறை மாற்றத்திற்கு 'ஆம்' என்று வாக்களித்துள்ளனர்.
இதைச் சாத்தியப்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் உண்மையில் அனைவருக்கும் ஒரு பெரும் நன்மையையே செய்துள்ளார்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.இம்முறை வெற்றியைப் பதிவு செய்ய இயலாதவர்கள் எவரும் மனம் தளர வேண்டாம்.நாம் தொர்ந்து போராடுவோம்.
இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், சீமானுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு