இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையிலிருந்து லெபனான் விலக வேண்டும் : ஹிஸ்புல்லா வலியுறுத்தல்
இஸ்ரேலுடன் முன்னெடுக்கப்படும் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து லெபனான் ஜனாதிபதி மிச்செல் அவூன் விலகிக்கொள்ள வேண்டும் என ஹிஸ்புல்லா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபழ்லல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நேரடிப் பேச்சுவார்த்தைப் பாதையைத் தவிர்த்து, லெபனானுக்கான சிறந்த தெரிவுகள் குறித்து தேசிய அளவில் ஒருமித்த புரிதலுக்கு வருவது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நலன்களுக்கு உகந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலியப் படைகளின் வெளியேற்றம்
இஸ்ரேலியப் படைகள் லெபனானில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிரிக்கு விட்டுக்கொடுப்புகளைச் செய்வதன் மூலம் லெபனான் மீது அரசியல் ரீதியான அழுத்தங்களை திணிக்க முயலும் எந்தவொரு முயற்சியையும் தங்கள் அமைப்பு எதிர்க்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது அமுலில் உள்ள போர்நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் விருப்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனானின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, நாட்டின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதே ஹிஸ்புல்லாவின் பிரதான நிலைப்பாடாக உள்ளது.
இந்தப் போர்நிறுத்தச் சூழலில் இஸ்ரேலியப் படைகளின் வெளியேற்றம் மற்றும் லெபனானின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சர்வதேச அளவில் அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 16 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri