லெபனான் மக்கள் உடனடியாக வெளியேறுக! இஸ்ரேல் இராணுவத்தின் அதிரடி அறிவிப்பு
லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அறிவித்துள்ளது.
ஈரானின் திட்டமிட்ட வான்வழி தாக்குதல்களால் மீண்டும் பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
தாக்குதல் நடத்துவதற்கு திட்டம்
ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் வலுவான தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அந்த நாட்டின் மீது கடந்த 28 ஆம் திகதி அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலுடன் சேர்ந்து நடத்திய இந்த இராணுவ அதிரடியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான்,இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் தலைமை குரு அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.