முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் சுவரொட்டிகள்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் (Rauff Hakeem) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோருக்கு எதிராக கண்டி (Kandy) மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் அக்குரணை உள்ளிட்ட பல பகுதிகளிலும் "ஹக்கீம், ஹலீம் கண்டிக்கு வேண்டாம்” என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன.
பிரசார கூட்டம்
நேற்று முன்தினம் அக்குரணையில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக அக்குரணை ஊர் மக்கள் கோசமெழுப்பிய நிலையில் நேற்று இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அக்குரணையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளத்திற்கு தீர்வு தருவதாக கூறி பல தேர்தல்களிலும் வாக்குறுதி வழங்கி விட்டு மக்களை ஏமாற்றுவதாக கூறியே இவ்வாறு பொதுமக்கள் ஹக்கீமுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 23 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
