நாடாளுமன்ற உறுப்பினர்களின் துப்பாக்கி கொள்வனவு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு துப்பாக்கிகளை(ரிப்பீட்டர் ரக) பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் அவர்கள் பதவியில் இருந்து வெளியேறிய பிறகும் அதைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தலா இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்யும் போது அவர்களுடன் செல்கிறார்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளில் தங்குகிறார்கள்.
இதனை தவிர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கைத்துப்பாக்கிகளும் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட நிதியில் இருந்து ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய, அவர்கள் வாழும் மாவட்டங்களில் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீரவிடம் தெரிவித்துள்ளது.
விதிக்கப்பட்டுள்ள தடை
இதன்படி, அவர்கள் , Panser Arms 12 Bore Pump Action Shot Gun Model SS12 ( 258,218.36 ரூபாய்), Panser Arms 12 Bore Ambidextrous Mag Fed Semi Auto Shot Gun Model G2 Pro— Colour Black (363,117.89ரூபாய்), Panser Arms 12 Bore Ambidextrous Mag Fed Semi Auto Shot Gun Model G2 Pro—Colour Desert ( 387,386.84ரூபாய் ) ரக துப்பாக்கிகளை கொள்வனவு செய்யமுடியும்.
எனினும், அவர்கள் இந்த ஆயுதங்களை நாடாளுமன்றத்திற்கு அல்லது மக்கள் கூடும் இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்படும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கும் தனிப்பட்ட சொத்துக்களுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.
செயலாளர் நாயகம் ரோஹணதீர இந்த தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |