அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படுகின்றன.
முதலாம் தவணை முடிவு
2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம் தவணை செப்டெம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த விடுமுறை
அத்துடன், டிசம்பர் 2ஆம் முதல் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் நிலைமை மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் அவ்வப்போது இடைநிறுத்தப்பட்டன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam