பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
புதிய இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயங்கள் அனைத்தும் நாளை(14) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹா மற்றும் களனி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு நாளையதினம்(14) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குறித்த பாடசாலைகளை மூடுவதற்கு மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
விடுமுறை
இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க, பியக ஆரம்ப, யபரலுவ ஆனந்த வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க்பபட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam