அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
கடந்த செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்கு செல்ல முடியாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றினால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடமை நிலையங்களுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கு, தங்கள் வசிப்பிடத்தல் உள்ள கிராம அதிகாரியின் சிபாரிசுடன் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விடுமுறை
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
