கிழக்கில் பாடசாலைக்கு முன்னால் கசிப்பு விற்பனை.. சிஐடி நடத்திய அதிரடி வேட்டை!
மட்டக்களப்பு - வாழைச்சேனை முறாவோடை தமிழ் மகா வித்தியாலத்துக்கு முன்பு நீண்டகாலமாக கசிப்பு விற்பனை நிலையமாக இயங்கி வந்த வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டை, 'முழு நாடுமே ஒன்றாய் போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம்' எனும் தேசிய செயற்பாட்டு திட்டத்தின் கீழ் நேற்று பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, 100 லீற்ற கசிப்புடன் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தெரிவித்துள்ளார்.
ஒருவர் கைது
கிழக்கு மாகாண குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீட்டில் கைது செய்யப்பட்டவர், நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        