பூரண கதவடைப்பு: திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட் கிழமை பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருகோணமலை நகரிலும் துண்டுப் பிரசுர விநியோகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றையதினம்(16.08.2025) இடம்பெற்றுள்ளது.
இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை இளைஞர் அணி ஏற்பாடு செய்து துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துள்ளனர்.
பூரண கதவடைப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பூரண கதவடைப்பு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலையில் நடைபெற்ற மற்றுமொரு துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன், திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ்குமார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர் அப்துல் லதீப்பர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, கடைகளிலும் வீதிகளிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.
மேலதிக தகவல் - கியாஸ் ஷாபி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












