கொழும்பின் முன்னணி வைத்தியசாலை இருதய நோய் நிபுணத்துவ மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கொழும்பு - கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருதய நோய் நிபுணத்துவ மருத்துவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
15 வயது சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள முன்னணி வைத்தியசாலையொன்றின் 41 வயது இருதய நோய் நிபுணத்துவ மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.
குறித்த மருத்துவர் பண்டாரகமையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஈடுபடுத்தியமை மற்றும் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மாலைத்தீவின் முன்னாள் பிரதி நிதி அமைச்சர், மிஹிந்தலை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.