இணையத்தில் விற்கப்பட்ட 15 வயது சிறுமி! இலங்கையில் கைதான வெளிநாட்டின் முக்கியஸ்தர்
இலங்கையில் 15 வயது சிறுமி பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜை, மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரொருவர் என தெரியவந்துள்ளது.
கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32 சந்தேகநபர்கள் கைது செய்யபப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சிறுமியுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 45 வயதான மாலைத்தீவு பிரஜையொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்தது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரொருவர் என இலங்கை காவல்துறையினருடன் உறுதிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எனக்கூறப்படும் நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam
