சீனாவின் கைப்பாவையாக செயற்படும் தலைவர்கள்! ஜே.வி.பி சாடல்
சீனாவில் விலைக்கு வாங்கப்பட்ட ஆட்சியாளர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டின் தலைவர், ஆட்சியாளர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்கள் திருடர்கள் என்றால் அந்த நாட்டுக்கு எதிர்காலமில்லை. ஊழல் மோசடிகள் மூலம் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களிடமிருந்து அவற்றை மீளப் பெற்றுக்கொள்வோம் என உறுதியளிக்கின்றோம்.
இந்த தலைவர்கள் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். நாம் நாடாளுமன்றில் காசோலை இலக்கங்களுடன் இந்த விடயத்தை அம்பலப்படுத்தியிருந்தோம்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சீன நிறுவனங்கள் 6.5 மில்லியன் டொலர் பணத்தை வழங்கியுள்ளன.
இந்த தலைவர்கள் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் இவர்களிடம் என்ன வெளியுறவுக் கொள்கையை காண முடியும்.
இந்த விலைக்கு வாங்கப்பட்ட தலைவர்கள் சில நாடுகளின் பூகோல அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அந்த தரப்புக்களின் கைப்பாவையாகவே செயற்படுகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam