22வது திருத்த சட்டம் தொடர்பில் ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு அதிருப்தி
அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தில் உள்ள பல சாதகமான அம்சங்கள் 22வது திருத்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி விஜேநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
22வது திருத்த சட்டம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“19வது திருத்த சட்டத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவான பலனை தரக்கூடிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது குறித்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் 22ஆவது திருத்த சட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.
மேலும் இந்த செயல்முறையானது, அதிகாரத்தை பிடிப்பதற்கு ஜனாதிபதியின் அதிகார போராட்டமாக மாறியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை

இதேவேளை,19வது திருத்த சட்டத்தின் விதிகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam