சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்றத்துக்கு வருகை தராதமைக்கு அச்சுறுத்தலே காரணம்! சஜித் பகிரங்க குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Sajith Premadasa Government Of Sri Lanka Supreme Court of Sri Lanka
By Rakesh Aug 20, 2026 12:32 PM GMT
Report

அரசின் அச்சுறுத்தல் பாணியிலான கருத்துத் தெரிவிப்புக்கள் காரணமாகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிக்காமை தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பான சகல கடித ஆவணங்களையும் ஹன்சாட் பதிவுகளில் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் இன்று சபையில் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் வாயிலாக தவறான பிரசாரங்கள்

இது தொடர்பில் இதற்கு முன்னர் சபாநாயகருக்கும் சபை முதல்வருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஊடகங்கள் வாயிலாகத் தவறான பிரசாரங்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் அவர் கூறினார்.

சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்றத்துக்கு வருகை தராதமைக்கு அச்சுறுத்தலே காரணம்! சஜித் பகிரங்க குற்றச்சாட்டு | Lawyers Association Not Attending Parliament   

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இது தனது தனிப்பட்ட அழைப்பு அல்ல என்றும், தான் ஓர் இணைப்பாளராகவே செயற்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஊடாக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றே தான் வலியுறுத்தினார் என்றும், இதனை வேறு விதமாகத் தவறாகச் சித்தரித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச தரப்பினரின் நிலைப்பாடு

அரச தரப்பினரின் நிலைப்பாடு குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"நேற்று நாடாளுமன்றத்தில் அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலான தொனியிலேயே உரையாற்றினர். அரசமைப்பின் ஊடாக கருத்துத் தெரிவிக்கும் பேச்சுச் சுதந்திரம் இந்த நாட்டில் இல்லையா எனக் கேட்கின்றேன். அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை எந்தவொரு நபராலும் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

சட்டத்தரணிகள் சங்கம் வேறொரு நாளைக் கோரியுள்ள வேளையில், அரசுக்குச் சார்பான ஊடகங்கள், சட்டத்தரணிகள் சங்கம் அதனை நிராகரித்துள்ளது என்று தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரைப் போன்றே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஒரு பிரஜையாவார் என்றும், பிரஜைகளைச் சமமாக நடத்துவது அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார். 

அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்

அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்

 

பணப்பரிமாற்ற மோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பணப்பரிமாற்ற மோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

YOU MAY LIKE THIS VIDEO


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US