பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் - சட்டத்தரணி சுகாஸ்

Government Sri Lanka Law Rizad Badudeen Kanagaratnam Sugash
By Independent Writer Jul 19, 2021 10:17 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு, குரல் கொடுப்பது மட்டுமின்றி சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையைப் பொறுத்த வரை பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது ஒரு குழப்பகரமான வியாக்கியானங்களை கொண்ட அல்லது பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை திட்ட வட்டமாகச் சட்ட ரீதியாக வரையறுக்காத ஒரு சட்ட ஏற்பாடாகவே காணப்படுகின்றது.

பயங்கர வாதத் தடைச் சட்டம் என்பது இலங்கை அரசினுடைய அல்லது இலங்கை அரசை பல்வேறு பட்ட காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த, பல்வேறுபட்ட அரசாங்கங்களினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக செயல்படுகின்றவர்களை அல்லது அரசாங்கங்களினுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருந்தவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகத் தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்க முடியும்.

ஏனென்றால், இலங்கையிலே நடைபெற்றது ஒரு பயங்கரவாதம் கிடையாது. அது ஒரு இனம், தன்னுடைய விடுதலையை வலியுறுத்தி சர்வதேச சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் விடுதலைக்காக செயல்படுவது பயங்கரவாதம் ஆகாது.

அந்தவகையில் இலங்கையிலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதாவது இன்று சிறைகளிலே நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படாது அல்லது ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிவடையாது எப்பொழுது தங்களுடைய வழக்குகள் முடிவடையும் என்பது கூடத் தெரியாது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

2009ஆம் ஆண்டுக்குப் பின் பயங்கரவாதம் இல்லை. அல்லது பயங்கர வாதத்தை நாங்கள் முறியடித்து விட்டோம் என்று இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தது உண்மை.

ஆனால் 2009இற்குப் பின்னர் நான் மேலே குறிப்பிட்ட வாறு, தங்களுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறாக செயல் படுகின்றவர்களை அடக்குவதற்கு தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் விரும்பியோ, விரும்பாமலோ கொண்டு வருவதற்கான ஒரு உத்தியாக, ஒரு சாதனமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பது தான் உண்மை.

இன்று தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமின்றி, ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் தலைவர்களும் சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இது இலங்கை அரசும், அரசை ஆளுகின்ற அரசாங்கமும் தங்களினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவர்களை அல்லது ஏற்காதவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது என்பதற்கு மிகச்சிறந்த ஆதாரம் இது.

இதற்கான தீர்வுகள் என்று வருகின்ற பொழுது, முற்று முழுதான ஒரு சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையிலே நடைபெற்ற இனப் படுகொலைக்கு நடக்கின்ற பொழுது அங்கு இலங்கை அரசை வழிக்கு கொண்டு வருவதற்காக, இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை, முற்றாக நீக்க வேண்டும் என்கின்ற ஒரு பேரம் பேசலை, அல்லது ஒரு நிபந்தனையை விதிக்க முடியும்.

அல்லது இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்களின் ஊடாக வழங்கப்படுகின்ற அழுத்தங்களின் ஊடாக இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தான் ஒரே தீர்வு.

ஆகவே, இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு, நீக்குவதற்கு, ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்று பட்டு குரல் கொடுப்பது மட்டும் தீர்வைத் தராது. அதையும் தாண்டி சர்வ தேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US