சட்டத்தரணி ஒருவருக்கு மூன்றாண்டுகள் கடூழிய சிறை தண்டனை
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதி அரசர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் குறித்த சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுசில் ஜயதுங்க என்ற குறித்த நபர் சட்டத்தரணி நிலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிக்கு பொருந்தாத நடவடிக்கை
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு மூன்று ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றதினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரின் சட்டத்தரணி அந்தஸ்தை ரத்து செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நபருக்கு எதிராக மூவர் அடங்கிய விசேட நீதியரசர்கள் குழாம் ஒன்று விசாரணை முன்னெடுத்துள்ளது.
குறித்த நபருக்கு வேறும் குற்றப் பின்னணி கிடையாது எனவும் தண்டனை விதிக்கப்படும் போது நீதிமன்றம் இந்த விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தியதாகவும் உச்ச நீதிமன்ற நீதியரசர் அசேன் வெங்கப்புலி தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற விடயத்தையும் கருத்தில் கொண்டு சிறை தண்டனையை மூன்று ஆண்டுகளுக்கு வரையறைக்க தீர்மானித்ததாக நீதியரசர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை ஒன்றில் முன்னிலையான போது நீதிமன்றம் அவமரியாதை செய்யும் வகைகளும் சட்டத்தரணி ஒருவருக்கு பொருந்தாத வகையிலும் நீதிமன்றில் நடந்து கொண்டதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri