கௌரி சங்கரி தவராசா துணிகரமாக நிமர்ந்து நிற்கும் இரும்புச்சீமாட்டி!
சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் நேற்றைய தினம் இயற்கை எய்தினார்.
இவர் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான K.V. தவராசாவின் மனைவியான இவர் குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவரின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் ரஜீவ் அமரசூரிய,ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
அரசின் அதிபலத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் அடிக்கடி சவாலாக எழுந்து நின்று தசாப்த காலாகாலமாக வழக்காளிகளின் கடினமான துணிகரமாக முன்னெடுத்தவருமான எமது சகோதரி சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தவறிவிட்டார்.
தனது கட்சிக்காரர்களுக்காக சளைக்காது போராடிய வீரப்பெண்மணி அவர். ஜனவரி 1997 ஆம் ஆண்டு ஒரு நாள். நான் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து விலகி சில நாட்களில் எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
அழைத்தவர் திருமதி கௌரி சங்கரி தவராசா. நான் திணைக்களத்திலிருந்து விலகி விட்டதாகவும் எனக்கு வேலை கொடுக்கும்படி திரு அமீன் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் முன்னிலைப்பட தவறியதால் பிணையாளி ஒருவர் கடுகடுப்பான மேல்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகி றிமாண்டில்போடப்படக்கூடிய வழக்கு அது.
அந்த வழக்கில் நியமித்து ஆஜராகும்படி பிணையாளி சார்பாக நியமித்தார். நான் வாதாடி பிணையாளியை காப்பாற்றினேன். அன்றிலிருந்து அவர் பல வழக்குகளில் என்னை அமர்த்தினார்.
இவ்வாறு எனது வளர்ச்சிக்கு ஆதரவளித்தார். அவர் மூலம் தவா அறிமுகமானார். உயர் பதவிகளிலுள்ளவர்களிடத்தில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். இருப்பினும் அவர் வலிந்து பலருக்கும் உதவுவார்.
கடினமான சிலவேளை சர்ச்சையான வழக்குகளில் கூட அவர் ஆஜராவார். அவர் மனித உரிமை மீறல் வழக்குகள் பலவற்றை நடத்தியிருக்கிறார்.
நீதிமன்ற தொகுதிவளாகத்தில் அன்னாரது இழப்பு உணரப்படுகிறது. எமது நண்பர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் ரஜீவ் அமரசூரிய தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
படுபயங்கர கோவிட் 19 ஆல் இழந்துவிட்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் இழப்பால் ஆழ்ந்த துயரடைந்தோம். தொழில் நிபுணத்துக்கோ சட்டவாட்சிக்கோ பிரச்சினை அல்லது அச்சுறுத்தல்கள் வரும்போதெல்லாம் துணிகரமாக நிமர்ந்து நிற்கும் இரும்புச் சீமாட்டி அவர்.
இருப்பினும் தன்னடக்கமான மனிதாபிமானி. தொலைபேசி அழைப்புகளுக்கு தவறாது பதிலளிக்கும் பண்பாளர். சட்டவளாகத்தில் பெரும் நிரப்ப முடியா வெற்றிடத்தை விட்டுச்சென்று விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தி சாந்தியடையட்டும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.