கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி விளக்கமறியலில்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தமரா குமாரி அபேயரத்னவுக்கு விளக்கமறியல் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று(27.04.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தமராவுக்கு விளக்கமறியல்
இதன்படி, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தமரா குமாரி அபேயரத்னவை மே 7 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது விளக்கமறியல் உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து, சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam