அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை!....அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவு
அப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அந்நிறுவனத்தின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மற்றைய கையடக்க தொலைபேசிகளிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக அப்பிள் நிறுவனம் சட்டவிரோத நடைமுறைகளை கையாண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது, வாடிக்கையாளர்களின் செலவுகளை உயர்த்தும் நோக்கில், மென்பொருள் மேம்படுத்தல்களை தடுத்துள்ளதாகவும் பாவனையில் சிக்கல்களை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்று செயலிகள்
மேலும், அப்பிள் ஸ்மார்ட் கடிகாரங்களை அப்பிள் அல்லாத கையடக்க தொலைபேசிகளுடன் இணைப்பதில் வேண்டுமென்றே சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பிள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பிள் கையடக்க தொலைபேசிகளில் ஏனைய பணப்பரிமாற்று செயலிகளின் பாவனையை மட்டுப்படுத்தி 'அப்பிள் பே' (Apple Pay) செயலியை இலகுபடுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், அப்பிள் நிறுவனம் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நற்பெயர்
கடந்த காலங்களில் அப்பிள் நிறுவனம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் மேற்கண்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை எதிர்கொள்ளவுள்ளதோடு அப்பிள் நிறுவனம் மீதான நற்பெயர் பாதுகாக்கப்படும் என அந்நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
