லோரன்ஸ் மலையக அரசியல் ஆளுமை: அருட்தந்தை மா.சக்திவேல் இரங்கல்

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Sri Lanka
By Shan Jun 01, 2023 09:31 PM GMT
Report

நண்பர் லோரன்ஸ் மலையக அரசியல் ஆளுமை என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (01.06.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலையக தமிழர்கள் இந்நாட்டில் 200 ஆண்டு கால வரலாற்றை நிறைவு செய்து அடுத்த நூற்றாண்டை நோக்கிய பயணிக்கவுள்ளது.

மலையக அரசியல் கனவு

இந்நிலையில் மலையக அரசியலின் கலங்கரை விளக்கமாக அரசியல் திசை காட்டியான ஆளுமைகளின் ஒருவரான நண்பன் லோரன்ஸ் அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் உறவுத் தோழர்கள் அனைவருக்கும் மலையக மக்களின் மாண்பை காக்கும் அமைப்பு தனது தோழமையுள்ள அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

லோரன்ஸ் மலையக அரசியல் ஆளுமை: அருட்தந்தை மா.சக்திவேல் இரங்கல் | Lawrence Hill Political Personality M Satthivel

அவரது அரசியல் வழியில் பயணிப்பதே காலத்தின் கட்டாயமாக ஏற்று மலையக விடியலுக்கு வித்திடுவது எமது பொறுப்பாக அமையும் என்பதை கூற விரும்புகின்றது.

"தியாகங்கள் செய்யக் கூடியவர்களுக்கு மட்டுமே அரசியலில் வித்தாக முடியும்" அந்த வகையில் மலையக மண்ணின் அரசியலுக்கு மக்களின் இருப்பிற்கு தம்மை அர்ப்பணித்த அரசியல் ஆளுமையே மறைந்த நம் நண்பர்.

மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் எனும் பதத்திற்குள் அடக்கி விட முடியாது. அடக்கவும் கூடாது. அவ்வாறு அடக்குவது மலையக மக்களுக்கு எதிராக புரியும் அரசியல் அநீதி மட்டுமல்ல, துரோகமுமாகும் என்பதில் மறைந்த நம் நண்பர் தெளிவாக இருந்தார்.

இந்தியாவில் வாழும் மக்கள் தாம் வாழும் மாநிலத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

மலையகத்தின் அரசியல் காவலர்கள்

அந்தவகையில் மலையக தேசத்தின் சிற்பிகள் மலையகத்தவர் அடையாளத்துடனேயே வாழ வேண்டும் என்று கனவு கண்டவர். அத்தோடு தனது கனவு காண அரசியல் வழி வரைபடத்தை வரைந்து மக்கள் முன்வைத்துள்ளார்.

மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதோடு அவர்களின் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்க புவிசார் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டும் அதன் மூலம் பொருளாதாரம் இவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை எல்லாம் ஆழ சிந்தித்து எழுத்து வடிவில் வழிகாட்டியதோடு அதற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்தார்.

மலையகத்தின் அரசியல் காவலர்கள் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டவர்களால் மலையக அரசியல் தடம் புரண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. அதன் வேதனையோ என்னவோ அவர் எம்மை விட்டு பிரிந்துள்ளார்.

லோரன்ஸ் மலையக அரசியல் ஆளுமை: அருட்தந்தை மா.சக்திவேல் இரங்கல் | Lawrence Hill Political Personality M Satthivel

நண்பர் லோரன்ஸ் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்போர் இறுதி சடங்கில் கலந்துகொள்வோர் அவரது அரசியல் கனவிற்கும் அதற்கான அரசியல் வரைபடத்திற்கும் இறுதி கடன் செலுத்துவதற்கு இடம் அளிக்கக் கூடாது அது பாரிய சவால்.

நண்பர் லோரன்ஸ் மலையக மக்கள் முன்னணியின் வித்தகர்களில் முக்கியமானவர். அதன் காவலர் மலையக அரசியலுக்கும் உரித்தாளர் அவர் மலையக அரசியல் வரலாற்றில் தடம் பதித்து அவ் வரலாற்றோடு பயணிக்கும் பொறுப்பை காலத்தின் கட்டாயமாக்கியுள்ளார்.

அவரின் மலையக அரசியல் கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றி மலையக மக்களை புதிய நூற்றாண்டை நோக்கி அழைத்து சென்றல் மட்டுமே மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்க முடியும். அதுவே நம் தோழருக்கான வாழ்வு கடனாக அமையும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW            


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US