வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களுக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது? சிவசேனா கேள்வி
வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு ஒரு சட்டமும் இந்து ஆலயங்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்து ஆலயங்களுக்கு ஏன் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது ? என்று சிவசேனாவின் இணைப்பாளர் தமிழ் திரு மாதவன் ( Madhavan ) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று ( 07 ) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் .
இதன்போது பேசிய அவர்,
வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு ஒரு சட்டமும் இந்து ஆலயங்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கும்போது நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதை நாங்கள் பார்க்கின்றோம் .
மதுபான நிலையங்கள் , போக்குவரத்து , அரச திணைக்களம் , அரசியல் வாதிகளினால் நடாத்தப்படும் கூட்டங்கள் இது போன்ற இடங்களில் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள் .
ஆனால் ஆலயங்களுக்கு இவ்வளவு ஒரு கட்டுப்பாடுகளை விதிப்பது ஏன் என்பது தான் எங்களுடைய கேள்வியாக இருக்கின்றது என்றார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
