இத்தாலியில் தொழில் பெற்றுத்தருவதாக பெருந்தொகை பணமோசடி
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பேராதனை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவர், 1,250,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் பணியகத்தின் விசேட புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக பணியக புலனாய்வு அதிகாரிகள் பேராதனை பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு சென்றபோது சந்தேகநபர் வீட்டில் இல்லாததால், பணியகத்தின் கண்டி மாகாண அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரியான தகவல்களை கண்டறியுமாறு அறிவுறுத்தல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று (6/2) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர், அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எந்தவொரு நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்கு பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், நிறுவனம் தொடர்பான சரியான தகவல்களை கண்டறியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பில் www.slbfe lk இணையதளம் அல்லது 1989 ஹாட்லைனை அழைப்பதன் மூலம் தகவல்களை பெறுமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        