சீரற்ற காலநிலை: யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மரங்கள் தொடர்பான விபரங்களை தெரியப்படுத்துமாறு யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய, பொதுப்போக்குவரத்து பாதைகள், பாடசாலைகள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் உயிராபத்து விளைவிக்கக்கூடிய முழுமையாக அல்லது பகுதியளவில் அகற்ற வேண்டிய மரங்கள் தொடர்பான விபரங்களுடன் 06.06.2024ஆம் திகதி பி.ப 3.45 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த புகைப்படத்துடன் கூடிய விபரங்களினை மென்பிரதியாக jaffna@dmc.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 06.06.2024 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாயத்த நடவடிக்கை
தற்போதய தென்மேல் பருவப் பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் யாழ். மாவட்டத்திலும் உணரப்படுகின்றமையினாலேயே குறித்த முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam