திருகோணமலையில் நடைபெறவுள்ள விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின் வெளியீடு
திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் விக்கி நவரட்ணத்தின் 'தூரத்து விண்மீனை கண்டேன்', 'விழிகளில் ஒரு வானவில்' ஆகிய இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு 12.07.2025 (சனிக்கிழமை) வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வு, திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறும்.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் மேயர் க.செல்வராஜா (சுப்ரா), சிறப்பு விருந்தினராக திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவர் மூத்த எழுத்தாளர் திருமலை நவம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளவர்கள்
இந்நிகழ்வில், விசேட உரையை வாசல் வாசகர் வட்டத்தின் செயலாளர் , வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் சரவணபவானந்தம் திருச்செந்தூரன் நிகழ்த்துவார். நூல்களுக்கான மதிப்பீட்டுரைகளை கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன், கவிஞர் க.யோகானந்தம், கவிஞர் யோ.புரட்சி ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில், சிரேஷ்ட கலை, இலக்கியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல வருட காலம் சேவையாற்றிய சிவஸ்ரீ அ.அரசரெத்தினம், பி.ரி.அஸீஸ், வே.சரவணபவ ஆனந்தம், விக்கி நவரட்ணம், ப.மதிபாலசிங்கம் ஆகியோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
