கண்டாவளை பிரதேச செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலி அங்குரார்பணம்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
செயலி அங்குரார்ப்பணம்
கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவையை இலகுவாக வழங்கும் வகையில் செயலி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினரான ஜெ.ரஜீவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் முகுந்தன் மற்றும் துறை சார்ந்த திணைக்களின் தலைவர்கள் பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முதல் செயலி
இலங்கையில் முதலாவதாக பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணையவழி பங்கீட்டு அட்டையும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
