பிரான்சில் முதன்முறையாக பொம்மை திரைக்காவியம் வெளியீடு
இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினரின் ஏற்பாட்டில், ஈழ நிலத்தின் உண்மை நிலையைச் சமரசமின்றி வெளிப்படுத்தும் “பொம்மை” திரைப்படம் பிரான்சில் முதன்முறையாகத் திரையிடப்படவுள்ளது.
திரையிடல் விபரங்கள்
நாள்: 10.05.2026
நேரம்: மாலை 17:15 மற்றும் 19:15 மணி (இரு காட்சிகள்)
இடம்: Cinéma Alice Guy, 24, rue Aretha Franklin, 93000 Bobigny (Métro Bobigny).
சுமார் 1 மணி 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம், எமது நிலத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளையும், நாம் தவிர்க்கத் தயங்கும் சிக்கல்களையும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளது.

இது வெறும் பொழுதுபோக்குச் சித்திரமாக அமையாமல், நாம் கடந்து வந்த துயரங்களையும், இனி நாம் கடக்க வேண்டிய தூரத்தையும் உணர்த்தும் ஒரு சிந்தனை மருந்தாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரையிடல் மூலம் கிடைக்கப்பெறும் முழு வருமானமும் எமது தேசத்தின் முன்னேற்றப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்படும் என இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
எமது தேசத்தின் குரலாய் ஒலிக்கும் இந்தத் திரைக்காவியத்தைக் காண அனைவரையும் அன்புடன் அழைப்பதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan