புதுக்குடியிருப்பில் மாபெரும் விற்பனை சந்தை ஆரம்பித்து வைப்பு
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனை சந்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறி்த்த விற்பனை சந்தை இன்றையதினம் (10.03.2025) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.
விற்பனை சந்தையில் புதுக்குடியிருப்பு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததுடன் மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாெருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு செய்திருந்தனர்.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை பார்வையிட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உள்ளூர் உற்பத்தியாளர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.
அத்துடன் இவ் உள்ளூர் உற்பத்தி சந்தையானது வாரம் தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் இங்கும் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கி.டென்சியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 9 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
