மூதூரில் இரவு நேர உணவகங்கள் சுற்றிவளைப்பு
மூதூர் சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் சில இரவு நேர உணவகங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கசாலி தலைமையில் நேற்று (29) மாலை 6.00 மணியளவில் திடீர் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த திடீர் பரிசோதனையின் போது, சில உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு முறைகள், சுற்றுச்சூழல் சுத்தம், பணியாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களில் பல குறைபாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுகாதார விதிமுறை
இதனைத் தொடர்ந்து, சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான மீறல்கள் இடம்பெறாமல் இருக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், இவ்வாறான சுகாதார பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து உணவக உரிமையாளர்களும் சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam