துரதிர்ஷ்டமாக வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல்: பயணிகளின் கடைசி வார்த்தைகள்
111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலுக்கான டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் துரதிர்ஷ்டவசமான பயணத்தில் ஈடுபட்டவர்களின் கடைசி வார்த்தைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான பொது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
கடைசி வார்த்தைகள்
இந்த விசாரணையின் நோக்கமாக, விபத்து தொடர்பான விவரங்களை ஆராய்ந்து, இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.
அத்துடன், இந்த விசாரணை 2 வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் நாள் விசாரணையின் போது அமெரிக்க கடற்படை டைட்டன் நீர்மூழ்கியின் இறுதி கணங்களின் காட்சியை வெளியிட்டுள்ளது.
அந்த காட்சிகளில், 3 பிரிட்டிஷ் குடிமக்களை உள்ளடக்கிய பயணக்குழு, போலார் பிரின்ஸ் என்ற ஆதரவு கப்பலில் உள்ள ஊழியர்களுடன் தொடர்ந்து உரையாடியதை காட்டியுள்ளது.

இந்த உரையாடலில் ஆழம் மற்றும் எடை குறித்த கேள்விகளுக்கு பிறகு ஆதரவு கப்பலுடனான தொடர்பை டைட்டன் நீர்மூழ்கி கப்பல் இழந்துள்ளது.
இருப்பினும், ஆதரவு கப்பலான போலார் பிரின்ஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு “எல்லாம் நன்றாக உள்ளது” (All good here) என்பதே டைட்டன் நீர்மூழ்கி கப்பலிடம் இருந்து கிடைத்த கடைசி பதிலாக உள்ளது.

இதனையடுத்து, டைட்டன் நீர்மூழ்கி கப்பலுடனான தொடர்பு ஆழத்தில் செல்ல செல்ல குறைய தொடங்கியுள்ளதுடன் இறுதியில் சோகமாக டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியுள்ளது.
இதன் பின்னர் 114 நாட்களுக்குப் பிறகு நீர்மூழ்கியின் சில பாகங்களும், மனிதனின் உடல் சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam