திருகோணமலையில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நாளை இறுதி அஞ்சலி
மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் (R. Sampanthan) இறுதி கிரியைகள் நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் கடந்த 30ஆம் திகதி இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் காலமானார்.
அவரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதி கிரியைகள்
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள இறுதி கிரியைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், எஸ். சிறீதரன், இம்ரான் மஹ்ரூப் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள், கட்சி போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும், மறைந்த இரா. சம்மந்தனுக்கு நினைவு அஞ்சலி ஒன்று இன்று காலை வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாக நடைபெற்றது.
குறித்த நினைவு அஞ்சலி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசார், முன்னாள் பிரதேச
சபை உறுப்பினர், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி - எரிமலை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri