நல்லூர் தொகுதிக் கிளையில் சம்பந்தனுக்கு அஞ்சலி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நல்லூர் தொகுதி கிளையின் தலைவரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் தலைமையில் நேற்று(05) மாலை நடைபெற்றுள்ளது.
நினைவுச்சுடர்
நல்லூர் தொகுதி கிளை பணிமனையில் நடந்த இந்நிகழ்வில் நினைவுச்சுடரை நல்லூர் தொகுதி கிளையின் செயலாளர் இ. இராஜதேவன் ஏற்றி வைத்தார். இரா. சம்பந்தனின் திருவுருவ படத்துக்கு சீ. வீ. கே. சிவஞானம், இராஜதேவன் இணைந்து மலர் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan