இலங்கையில் மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட விடயம்! அம்பலப்படுத்தும் பதில் ஜனாதிபதி
நாட்டில் நிலவி வந்த நிதி நெருக்கடி நிலைமைகளை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கம் மூடி மறைத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சீ.என்.என். செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட விடயம்
நாடு எதிர்நோக்கி வந்த மற்றும் எதிர்நோக்கி வரும் பொருளாதார, நிதி நெருக்கடி நிலைமைகளை அரசாங்கம் மக்களிடமிருந்து மறைத்து விட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என்பதனையும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவை என்பதனையும் கடந்த அரசாங்கம் வெளிப்படுத்த தவறியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரத்து செய்யப்படும் கடன்கள்! நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் - ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல் |
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான திட்டம்
எதிர்வரும் ஆண்டு நிறைவிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதனை தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.