லசித் மலிங்கவின் கில்லர் நூல் வெளியீடு
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவினால் எழுதப்பட்ட கில்லர் என்ற நூல் நேற்றைய தினம்(20) கொழும்பில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
பந்து வீச்சு தொடர்பில் தெளிவாக விளக்கும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.
துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வதற்கான 21 முக்கியமான உத்திகள் தொடர்பில் இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
கில்லர் நூல்
இந்த நூல் வெறும் பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல எனவும், துடுப்பாட்டவீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் என துறைசார் அனைவரும் பயன்பெற்றுக்கொள்ள முடியும் என மலிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் கிரிக்கட் வீரர்களான சனத் ஜயசூரிய, மஹல ஜயவர்தன, சமிந்த வாஸ் மற்றும் மார்வன் அத்தபத்து போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பந்து வீச்சாளர்களுக்கு வழிகாட்டியாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் கிரிக்கட் ரசிகர்களுக்கு பல்வேறு புதிய அனுபுவங்களை வழங்கக் கூடிய வகையிலானது என தெரிவிக்கப்படுகின்றது.
2025 மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்: இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்திய-இங்கிலாந்து அணிகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |