இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசக பயிற்றுநராக லசித் மலிங்க நியமனம்
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, தேசிய ஆண்கள் அணியின் ஆலோசகராகவும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நியமனம், 2025 டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரை ஒரு மாத காலத்திற்குள், குறுகிய கால அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய பகுதியில் வசிக்க கட்டாயப்படுத்தப்படும் மக்கள் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
நியமனம்
இந்த காலகட்டத்தில் மலிங்க இலங்கையின் தேசிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால், 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவு கொடுப்பார்.
வரவிருக்கும் உலக கிண்ண போட்டிகளுக்கான இலங்கையின் தயாரிப்புகளை மேலும் வலுப்படுத்த, மலிங்கவின் நிபுணத்துவத்தை எதிர்பார்ப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam