லசந்த படுகொலை வழக்கு! சட்ட மா அதிபர் விளக்கம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படவுள்ள விவகாரம் குறித்து சட்டமா அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
லசந்த படுகொலை
எனினும் குறித்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அதன் பின்னர் சம்பவம் நடந்து ஆறு வருடங்களின் பின்னர் 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் லசந்தவின் சாரதியைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ராணுவ சார்ஜண்ட் மேஜர் பிரேமானந்த் உதலாகம கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் சாரதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதற்கு முன்னதாக எதுவித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
விடுதலை
அத்துடன் அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தி்ல் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களை கருத்திற் கொண்டு அவரை வழக்கில் இருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதே போன்று சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளான திஸ்ஸசிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில் அவர்களையும் விடுதலை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா?](https://cdn.ibcstack.com/article/87592ec4-9db7-4b06-a590-3e55b177619b/25-67a59318638c0-sm.webp)
பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)