இலங்கையில் ராட்சத பீட்சா : சாப்பிட படையெடுக்கும் மக்கள்
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியர்களால் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் உலக பீட்சா தினத்தை முன்னிட்டு ஹோட்டல் வளாகத்தில் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார்.
பாரிய பீட்சா
பீட்சாவை உருவாக்க தக்காளி, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, 04 வெவ்வேறு நிறங்கள் மற்றும் சுவைகள் கொண்ட பெல் பெப்பர்ஸ், ஆலிவ் எண்ணெய் மற்றும் பச்சை வெங்காயம் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்பட்டது.

50 அங்குல நீளமும் 12 கிலோ எடையும் கொண்ட இந்த பீட்சாவை 08 நிமிடங்களில் பேக் செய்ய முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஹோட்டல் வளாகத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பீட்சாவை சுவைக்க வருகை தந்துள்ளனர்.
உலக பீட்சா தினம்
08 பேர் ஒரே நேரத்தில் ரசிக்கும் வகையில் 25 அங்குல பீட்சா துண்டுகள் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்த ஹோட்டல் உலக பீட்சா தினத்தை முன்னிட்டு 40 அங்குல நீளமுள்ள பீட்சாவை தயார் செய்தது.



பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam