கோட்டாபயவின் பதவி காலத்தில் பெறப்பட்ட பெருந்தொகை கடன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சந்தர்ப்பத்தில் அவரது இரண்டு ஆண்டு பதவி காலத்தில் நான்கு ட்ரில்லியன் ரூபாய் கடனாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் மொத்த அரச கடன் தொகையானது 13.031 ட்ரில்லியனாக இருந்தது.
அது கடந்த 2021 ஆம ஆண்டு ஒக்டோபர் மாதம் அளவில் 17.344 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் நாடு சுதந்திரமடைந்து கடந்த 74 ஆண்டுகளில் நாட்டில் முழு கடன் தொகையில் மூன்று ஒரு பங்கு கடனை கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் 2019 ஆம் ஆண்டு 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக இருந்த தனிநபர் கடன் தொகையானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 900 ரூபாயாக அதிகரித்தள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
