அமைச்சர்கள் பயன்படுத்திய வானூர்திகளுக்கு செலுத்தப்பட வேண்டிய பெருந்தொகை பணம்
முன்னாள் அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பயணங்களை மேற்கொள்ள வாடகைக்கு பெற்றுக்கொண்ட உலங்குவானூர்திகளுக்காக இலங்கை விமானப்படைக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடியே 25 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சுக்கள் உட்பட 10 அரச நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் இவ்வாறு பணத்தை செலுத்தவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கை விமானப்படையிடம் 2003 முதல் 2013 ஆம் ஆண்டு இடையிலான காலத்தில் பெற்றுக்கொண்ட வானூர்திகளுக்காக 60 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெற்றுக்கொண்ட வானூர்திகளுக்காக மேலும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை செலுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இநத பணம் இதுவரை விமானப்படையினருக்கு செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்திற்காக கிடைக்க வேண்டிய 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தொடர்பில் விசாரணை நடத்தி, அறவிடப்பட வேண்டிய நிலுவை பணம் தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறுப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமானப்படையிடம் இருந்து 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வானூர்திகளுக்கு செலுத்த வேண்டிய மேலும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை அறவிடுவது தொடர்பான அறிக்கையை நிதியமைச்சிடம் வழங்க தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பணத்தை நிதியமைச்சு ஊடாக அறவிட்டு, அதனை விமானப்படையினருக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

F-35B விமானத்தை சரி செய்வதில் சிக்கல்., மற்றொரு விமானத்தில் பிரித்தானியாவிற்கு ஏற்றிச்செல்ல முடிவு News Lankasri
