முள்ளம்பன்றி பயிற்சிக்கு தயாராகும் நேட்டோ படைகள்! மொஸ்கோவுக்கு எச்சரிக்கையா..!
போல்டிக் வரலாற்றில் நேட்டோ இராணுவக் கூட்டணியின் மிகப் பெரிய பயிற்சிகள் ஆரம்பமாகின்றன..
இந்த பயிற்சிகளுக்கு ஹெட்ஜ்ஹொக் ( முள்ளம்பன்றி) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிகள் இன்று ஆரம்பித்து அடுத்த இரண்டு வாரங்கள் எஸ்டோனியாவில் நடைபெறவுள்ளன.
இந்த பயிற்சிகளில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் தற்போது நேட்டோ உறுப்பினர் அல்லாத பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த 15,000 துருப்புக்கள் பங்கேற்கவுள்ளன.
இந்தப்பயிற்சிகள், ரஷ்யா,உக்ரைன் மீதான படையெடுப்பை ஆரம்பிக்கும் முன்பே திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நேட்டோவிற்கும் மொஸ்கோவிற்கும் இடையே கணிசமான அளவு பதற்றம் அதிகரித்துள்ள தருணத்தில் இப்போது நடைபெறுகின்றன.
ரஷ்ய படையெடுப்பின் பின்னணியில், போல்டிக் நாடுகளுக்குப் பயிற்சிகள் மிகவும் அடையாளமாக உள்ளன.
எதிரிப் படைகளின் இதேபோன்ற ஊடுருவலுக்கு பதிலளிக்கும் திறனை சோதித்துக்கொள்வதற்கு போல்டிக் நாடுகளுக்கு இந்த பயிற்சிகள் அவசியமாகின்றன.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 23 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
