மாவனெல்லையில் கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் திருட்டு
மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து திருப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்களை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெடிபொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படும் மாவனெல்ல-மொல்லியகொட கற்பாறை உடைக்கும் இடத்தின் உரிமையாளர் இது தொடர்பில் டிசம்பர் 22 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கேகாலை மாவட்ட செயலாளர் மற்றும் சபரகமுவ மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் 15 கிலோகிராம் அமோனியம் நைட்ரேட், 750 கிராம் வோட்டர்-ஜெல் வெடி, 20 டெட்டனேட்டர்கள் மற்றும் 35 மீட்டர் டெட்டனேட்டர் தண்டு ஆகியவை அடங்குகின்றன.
இந்தநிலையில் குறித்த இடத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உட்பட சுமார் 30 பேர் இதுவரை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கண்டியின் வட்டபுலுவவில் உள்ள மகாவலி உயானவின் நடைபாதையில் அமைந்துள்ள மதச்சிலை ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri