திக்கோவிட்ட துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள்
திக்கோவிட்ட துறைமுகத்தில் 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் கடற்றொழில் கப்பல் சோதனையிடப்பட்டது.
திக்கோவிட்ட துறைமுகத்திற்கு குறித்த நெடுநாள் கடற்றொழில் கப்பல் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள் கடற்றொழில் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
