பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
எதிர்வரும் நாட்களில் 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அவ்வாறான பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்களின் கொட்டத்தை அடக்குவதற்காகவே இவ்வாறு அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் அமைப்புகளின் குற்றச்சாட்டு
நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவும் பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் அளவில் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, தற்போதைய நிலையில் கீரி சம்பா உற்பத்தி செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்கள், அவற்றைப் பதுக்கி செயற்கைத் தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்தி, கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்துவருவதாக நுகர்வோர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




